(நா.தினுஷா) 

சித்திரவதை அற்ற இலங்கையை உருவாக்க வேண்டுமானால் உரிய பயிற்சிகளை பெற்ற பொறுப்புவாய்ந்தவர்களை பாதுகாப்பு துறைகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும் என மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பிலிப் திஸாநாயக்க தெரிவித்தார்.

நிபோன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயெ அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  

சித்திரவதை மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். அடிமை சமூத்தை பிரதிபளிப்பதே சித்திரவதையாகும். எனவே சித்திரவதை அற்ற இலங்கை உருவாக வேண்டுமானால் பொலிஸ் சேவை பிரிவுக்கு இணைத்து கொள்ளப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் மற்றும் சித்திரவதை தடுப்பு போன்ற துறைகளில் உரிய பயிற்சிகள் முறையாக வழங்கப்பட வேண்டும். 

காரணம் பொலிஸார் கைதிகளை தாக்குவதை சித்திரவதையாகவே கருதப்படுகின்றது. இதற்கான மாற்று திட்டங்கள் கொண்டுவரபட வேணடும் என்று தெரிவித்த அவர், கடந்த வருடத்தில் மாத்திரம்  உரிய வகையில் பயிற்சியற்ற 2500 க்கு மேற்ப்பட்ட பொலிஸார் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.