அம்பலாந்தொட்டை – ரிதிகம பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராட சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் 10 வயதானவர் எனவும் , தனது நண்பர்களுடன் நேற்று(21-06-2018) மாலை நீராட சென்ற வேளையே நீரில் மூழ்கியுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் சிறுவனின் பெற்றோரால் அம்பலாந்தொட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.