முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 20 கிலோகிராம் கிளைமோர் குண்டுகளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சந்தேகத்திற்கிடமான வகையில் இன்று காலை பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனையிட்ட பொலிஸார் 20 கிலோகிராம் கிளைமோர் குண்டுகளை கைப்பற்றியுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவரையும் கைது செயதுள்ளனர்.

எனினும் இச் சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் வந்த மேலும் இருவர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது