மாத்தறை நகரில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கும்பல் ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை பகுதியிலுள்ள நகையகமொன்றில் கொள்ளையிட சென்ற கொள்கை கும்பலுக்கும் பொலிஸாருக்குமிடையே மேற்படி துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவரும் இரண்டு பொது மக்களும் உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.