இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிபா 2018 உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியை காண்பதற்காக சைக்கிள் மூலம் ஈராலிருந்து 4200 கிலோமீற்றர் தூரம் வரை பயணம் மேற்கொண்டு மொஸ்கோவைச் சென்றடைந்துள்ளார். 

க்ளிபின் ப்ரான்சிஸ் எனும் குறித்த இளைஞன் கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதியன்றே தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதன்படி க்ளிபின் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் டுபாய் சென்று அங்கிருந்து படகு வழியாக ஈரான் சென்றடைந்து ஈரானிலிருந்து 4.200 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு ரஷ்யாவின் மொஸ்கோ நகரை சென்றடைந்துள்ளார். 

இது குறித்து அவர் அவர் தெரிவிக்கையில்,

விமானத்தில் ரஷ்யாவிற்கு சென்று, அங்கு ஒரு மாதம் தங்கும் அளவிற்கு என்னிடம் போதிய பணம் இருக்காது. எப்படி மலிவாக அங்கு செல்வது என்று நானே என்னை கேட்டுக் கொண்டபோது, சைக்கிள்தான் அதற்கு ஒரே வழி என்று தோன்றியது என்றார்.

அத்துடன் இவரின் இந்த பயணத்தன் போது பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டதாகவும் தொடர்ச்சியான சைக்கிள் பயணத்தினால் உடல் எடையை இழந்துள்ளதாகவும் அதிகளவான பணத்தை செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.