(எம்.எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறினாலும் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தினை வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியதனால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் அமையப் போவதில்லை. காரணம் ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்க விலகுவதாக கூறியபோதிலும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து தமது நடவடிக்கைகளை கையாள்வதாக தெரிவித்துள்ளது. 

ஆகவே அமெரிக்கா முன்னெடுத்த பணிகளை அவர்களின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் பலம்பொருந்திய மற்றொரு நாடு இலங்கை தமிழர் விடயங்களை கருத்திற் கொண்டு மனித உரிமைகள் பேரவையில் அழுத்தம் கொடுக்கும் என்றார்.