சத்திர சிகிச்சையின் பின்னர் ஒருசிலருக்கு கைகளில் தோன்றும் நிணநீர் முடிச்சுக்களை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை அறிமுகமாகியுள்ளது.

மார்பக புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக அளிக்கப்படும் சிகிச்சைக்கு பின்னர் அதாவது சத்திர சிகிச்சை, ரேடியேசன் தெரபி, கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் முடிவடைந்த பிறகு, ஒரு சிலருக்கு கைகளில் வீக்கம் ஏற்படும். சத்திர சிகிச்சைக்கு முன்னர் கைகளில் உள்ள நிண நீர் பாதை வழியாகவே நிணநீரானது இதயத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தது. 

புற்றுநோயிற்கான சத்திர சிகிச்சையின் போது இந்த நிணநீர் முடிச்சுகளை அகற்றிவிடுவதால், நிணநீர் பாதையிருக்கும். ஆனால் லிம்ப் நோட்ஸ் எனப்படும் நிணநீர் முடிச்சுகள் இருப்பதில்லை. இதனால் நிணநீரானது கைகளில் தேக்கமடையத் தொடங்குகிறது. 

ஏற்கனவே அங்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மற்றும் தெரபிகளால் தோல் பகுதி சுருக்கமடைந்திருக்கும். இதனால் நிணநீரானது தொடர்ந்து இயல்பாக இதயத்திற்கு செல்ல முடியாத நிலை உருவாகிவிடுகிறது.

இந்நிலையில் இரண்டு வகையினதான சத்திர சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். உடலில் வேறு எங்கேனும் vascularized lymph node transfer இதற்கு தான் மருத்துவத்துறையில் நிணநீர் முடிச்சுடன் கூடிய இரத்தவோட்டப்பாதையை வெட்டி எடுத்து இங்கு இணைக்கலாம் என்று குறிப்பிடுகிறார்கள். 

இதனை பொருத்தும் போது இரத்தம் செல்வதற்கும், இரத்தம் திரும்பி செல்வதற்கும் ஏற்றவகையில் இருக்கிறதா என்பதை துல்லியமாக மேற்கொள்வர். அதாவது ஒரு ஆர்ட்ரியும் (artery), ஒரு வெயினும் (vein) இருப்பது போல் பொருத்தவேண்டும். அதனால் தான் இதனை மைக்றோ சர்ஜேரி என்றும் குறிப்பிடுவார்கள். ஏனெனில் இரத்த குழாய்கள் ஒரு மில்லிமீற்றர் அளவேயிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

டொக்டர் ராஜன்

தொகுப்பு அனுஷா.