(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கில் அடுத்த மாதத்திற்குள் 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படுவதுடன் கிழக்கில் இந்த வருடத்திற்குள் குறித்த சேவையை ஆரம்பிக்கவும் முடியும் என கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டிசில்வா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 1990 சுவசெரிய  மன்றம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வடக்கில் அடுத்த மாதத்திற்குள் 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இந்த வருடத்திற்குள் குறித்த சேவையை ஆரம்பிக்க முடியும். இந்த சேவைக்கு அந்த அந்த பகுதிகளில் இருந்தே சேவைக்கு ஆட்களை இணைத்துக்கொள்கின்றோம்.

இதன்படி வடக்கில் சுவசெரிய சேவைக்கு 60 சாரதிகளும் மருத்துவ ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு 60 பேருமாக மொத்தம் 122 பேரை சேவைக்கு இணைத்து பயிற்சி வழங்கி வருகின்றோம். பெரும்பாலும் அடுத்த மாதத்திற்குள் இந்த சேவை வடக்கில் ஆரம்பிக்கப்படும் என்றார்.