கழுதைகளுக்கு வைத்தியசாலை

Published By: Digital Desk 4

21 Jun, 2018 | 03:57 PM
image

பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் ,தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் புதிதாக நிர்மாணித்துள்ள கழுதைகள் வைத்தியசாலை மற்றும் கல்வி மையம் ஆகியவை இன்று காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழுதைகள் வைத்தியசாலை மற்றும் கல்வி மையம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது.

பிரதம விருந்தினராக உலக மிருகங்கள் பாதுகாப்பு மையத்தின் பிரதிநிதி ஒட்டாரா குணவர்த்தன கலந்து கொண்டதோடு, மன்னார் பிரதேச சபையின் தலைவர் முஹமட் முஜாகிர், உறுப்பினர்கள், நகர சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளை பராமரிக்கும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, கழுதைகள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு அதனை பழக்கப்படுத்தி பயனுள்ள நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கைகளும் குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58