பேர்ப்பச்சுவால் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேன  ஆகியோரை ஜூலை 05 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருவரும் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே குறித்த இருவரையும் எதிர்வரும் ஜூலை 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.