(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

நக்கிள்ஸ் மலை சார்ந்த எந்தவொரு பகுதியையும் நாம் விற்க மாட்டோம். அவ்வாறான நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நக்கிள்ஸ் மலை பகுதி சார்ந்த நிலங்களை தனியாருக்கு விற்கபோவதாக கூறும் தகவல் உண்மையா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நட்டத்தில் இயங்கும் தோட்ட காணிகளை தனியார் கம்பனிகளுக்கு விற்று ஏதாவது ஒரு வகையில் இலாபத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்து அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. 

இதன் பிரகாரம் அரச தொழிற்முயற்சி அமைச்சராகவிருந்த கபீர் ஹாஷிம் முன்வைத்த 250 யோசனை கொண்ட திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீரம் வழங்கியது. 

எனினும் அந்த திட்டத்தில் நக்கிள்ஸ் மலை பகுதியில்லை. நக்கிள்ஸ் மலை சார்ந்த எந்தவொரு பகுதியையும் நாம் விற்க மாட்டோம். அவ்வாறான நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்றார்.