(எஸ்.ரவிசான்)

கொழும்பு 01 இல் அமைந்துள்ள இலங்கை சுங்க தலைமையகத்தின் இறக்குமதி பிரிவு அதிகாரிகள் தமது அலுவலக கடமைகளில் இருந்து விலகி பணிநிறுத்த நடவடிக்கையில் இன்றைய தினம் ஈடுப்பட்டனர்.

தேசிய அரசாங்கத்தின் கீழ் சுங்க தலைமையகத்தை மேற்பார்வை செய்வதற்காக குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அமச்சரவை பத்திரம் ஒன்று பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே மேற்படி சுங்க திணைக்களத்தின் இறக்குமதி; பிரிவு அதிகாரிகளினால் முன்னெக்கப்பட்டது. 

அரசின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் சுங்க திணைக்களத்தின் முன்பாக சுங்க அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.