கிளிநொச்சியில் புலி 

Published By: Digital Desk 4

21 Jun, 2018 | 02:22 PM
image

கிளிநொச்சி அம்பாள்குளம்  கிராமத்தில் இன்று காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொதுமக்களால்  அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.

இன்று காலை எழு மணியளவில்  அம்பாள்குளம் விவேகானந்த  வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை புலி மாடுகட்டுவதற்கு சென்ற இருவரை தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொதுமக்களால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெறுங்கையுடன் வனஜீவராசிகள்  திணைக்கள அதிகாரிகள்  வருகை தந்தனர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்டது.

மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள்  திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர்  இதற்கிடையில் எட்டு பேரை  சிறுத்தை தாக்கியிருந்தது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி  வளைத்த போது அத் திணைக்கள  உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.

இந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம பொது மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டினர். ஆனால் தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர்  குறித்த பற்றைக்குள் கிராம பொது மக்கள் பொல்லுகளுடன் சென்று சுற்றி வளைத்து தேடிய போது பற்றைக்குள் இருந்து வெளியேறி சிறுத்தை ஒருவரை தாக்கும் போதும் ஏனைய  பொது மக்கள் பொல்லுகளால்  தாக்கி கொன்றனர்.

சம்பவ இடத்தில்  கிளிநொச்சி  பொலீஸார், கிராம அலுவலர் உட்பட பலர் இருந்தனர்.

இன்று காலை முதல் பன்னிரண்டு மணி வரை பத்து பேரை சிறுத்தை தாக்கி காயப்படுத்தியது. அவர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிசை பெற்றுவருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39
news-image

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

2025-11-11 14:52:49