அமெரிக்காவில் உள்ள பிரபல உணவு விடுதியின் பர்க்கரில் எலி உயிருடன் இருந்த வீடியோ இணைய தளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள பிரபல வெண்டிஸ் உணவு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறித்த வீடியோவில் பர்க்கர்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையில் எலி உயிருடன் உள்ளது. மேலும், அங்குள்ள மேசையில் சிகரெட் ஒன்று கிடந்தது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. 

இதுகுறித்து கடை பணியாளர் ஸ்கை பிரேம், பர்க்கருடன் எலி இருப்பதை நானே என் கண்களால் பார்த்தேன். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன். இதனை உட்கொள்பவர்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன். சுகாதாரமற்ற உணவால் பலர் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தனர்.

குறித்த வீடியோ வெளியானதை அடுத்து வெண்டீஸ் உணவு நிறுவனத்தில் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுகளை தயாரித்தால் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்க நேரிடலாம். மிகவும் பிரபலமான உணவு நிறுவனத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.