இன்று சர்வதேச யோகா தினம், 2015ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி பூமியில் நீண்டநேரம் சூரிய ஒளி தெரியும் என்பதனால் அன்று யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

2015ம் ஆண்டு டெல்லியில் நடந்த யோகாதினம் நிகழ்வில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கின்னஸ் சாதனை புரிந்தமையும் குறிப்பிடதக்கது.

சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுவதற்கான திட்டவடிவம் 2015-ல் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட போது சீனா, அமெரிக்கா உட்பட 177 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

மேலுமு, 2016ம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாயந்த பட்டியலில் (UNESCO's list of Intangible Cultural Heritage) யோகா சேர்க்கப்பட்டது.