"நுண்­நி­திக்­கடன் நிறு­வ­னங்­களை மத்­திய வங்­கியின் கண்­கா­ணிப்பில் கொண்­டு­வ­ர­வேண்டும்"

Published By: Vishnu

21 Jun, 2018 | 08:26 AM
image

(எம்.மனோசித்திரா)

நுண்­நி­திக்­கடன் நிதி நிறு­வ­னங்­களின் செயற்­பாடு கார­ண­மாக வடக்கு, கிழக்­கிலே நடை­பெறும் அதி­க­ரித்த தற்­கொ­லைகள் தொடர்­வ­தற்கு இனியும் அனு­ம­திக்க முடி­யாது என மேல் மாகாண சபை உறுப்­பினர் சண்.குக­வ­ரதன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

வடக்கு, கிழக்கில் நுண்நிதிக் கடன் நிறு­வ­னங்­களின் செயற்­பாட்­டினால் தற்­கொ­லைகள் அதி­க­ரித்து வரு­வது தொடர்­பிலும் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்தும் விளக்கும் வகை­யி­லான செய்­தி­யாளர் மாநாடு நேற்று வெள்­ள­வத்தை சண்­முகாஸ் விடு­தியில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது வாழ்­வா­தா­ரத்தை மீளக்கட்­டி­யெ­ழுப்ப முடி­யாத வகையில் பெருங்­கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். யுத்­தங்­களின்போது அங்கு சுமார் 80 ஆயிரம் தொடக்கம் 90 ஆயிரம் பெண்கள் வித­வைகள் ஆக்­கப்­பட்­டனர். இவர்கள் தங்கள் குடும்­பங்­களின் வாழ்­வா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் மிகவும் அல்லற்பட்டு வரு­கின்­றனர். 

இதே­போன்றே 10 ஆயிரத்துக்கும் மேற்­பட்ட முன்னாள் போரா­ளிகள் சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்டு இருக்­கின்­றனர் என்ற போர்­வையில் அவர்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரத்­திற்­கு­ரிய திட்­டங்­களோ செயற்­பா­டு­களோ இல்­லாத நிலையில் அவர்­களின் பொரு­ளா­தா­ரமும் அன்­றாட வாழ்க்கை முறையும் கேள்­விக்­கு­றி­யா­­கவே இருக்­கின்­றது.

இங்கு நுண்­நி­திக்­கடன் நிதி நிறு­வ­னங்­களின் தேவை ஏற்­ப­டு­வ­தற்கு பல கார­ணங்கள்  உள்­ளன. யுத்­தத்தின் பின்­ன­ரான மீள் குடி­ய­மர்வில் இந்­திய அர­சாங்­கத்தின் வீட­மைப்புத் திட்­டத்தைத்தவிர பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சரி­யான முறையில் மீள் குடி­ய­மர்வு செயற்­ப­டுத்­தப்­ப­டா­த­தனால் தங்­களின் வாழ்­வி­டத்­துக்கான நிலையைத் தீர்­மா­னித்தல் தொடர்­பான பயம், விதவைப் பெண்­க­ளுக்கோ, புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட போரா­ளி­க­ளுக்கோ இரண்டு இலட்சம் ரூபா  நிதி­யினை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தாக அர­சாங்­கத்­தினால் கூறப்­பட்ட திட்டம் முழுமை பெறாமை, இறுதி யுத்­தத்தில் பொரு­ளா­தாரம் சார்ந்த இழப்­புக்கள் கார­ண­மாக அடகு மூலம் நிதி­யினைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலை,

அடிப்­படை மாதாந்த வரு­மா­னத்தைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய அள­வுக்கு நிரந்­தர வரு­மானம் உள்ள தொழில் அல்­லது வேலை­வாய்ப்பு இல்­லாமை, காணா­மல்­போன குடும்பத் தலை­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று தெரி­யாத கார­ணத்­தினால் உடல், உள ரீதி­யான செயற்­பாட்­டுத்­தி­ற­னற்று  தங்­கி­வாழும் சூழ்­நிலை ஆகி­யன இதற்­கான கார­ணங்­க­ளாக கொள்ள முடியும்.

 யுத்­தத்தின் பின்னர் வடக்குக் கிழக்கில் இவ்­வா­றான பிரச்­சி­னை­களிலிருந்து அவர்­களைப் பொரு­ளா­தார ரீதியில் மீட்­ப­தற்­காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட நுண்­நி­திக்­கடன் திட்டம் இன்று அவர்­க­ளையே தற்­கொ­லைக்கு இட்­டுச்­செல்லும் ஒரு துர்ப்­பாக்­கிய நிலைக்கு மாற்றியிருக்­கி­றது.

அண்­மையில் கிளி­நொச்சி மாவட்­டத்தில் 14 பெண்­களும் ஆண்­களும் யாழ்ப்­பாணத்தில் 19 பெண்­களும் ஆண்­களும், கிழ க்கு மாகா­ணத்தில் 19 பெண்­களும் ஆண்­களும், மன்னார், வவு­னியா போன்ற மாவட்­டங்­களில் 10 பெண்­களும் ஆண்­க­ளு­மாக மொத்தம் 62 பேர் தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ளனர்.

எனவே நுண்­நி­திக்­கடன் நிதி­நி­று­வ­னங்கள் ஆரம்­பிக்­கப்­பட்ட நோக்­கத்தை மறந்து குறிப்­பாக வடக்கு, கிழக்கில் யுத்­தத்தின் பின்­ன­ரான மீள் கட்­ட­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம் என்­பவை பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் மக்கள் மத்­தியில் அதன் வலியும் சலிப்பும் தொடர்ந்­தி­ருக்கும் வேளையில் இவ்­வா­றான தற்­கொ­லைகள் மிக வேதனை அளிக்­கின்­றன. 

உட­ன­டி­யாக அர­சாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள நுண்­நி­திக்­கடன் நிதி­நி­று­வ­னங்­களை கடு­மை­யான சட்­டங்­களின் மூலம் இலங்கை மத்­திய வங்­கியின் நேர­டிக்­கண்­கா­ணிப்பில் கொண்­டு­வர வேண்டும். தங்­க­ளது உயிரை நீத்த நுண்­நி­திக்­கடன் பெற்ற குடும்­பங்­களின் நுண்­நி­திக்­க­டனை முற்­று­மு­ழு­தாகத் தள்­ளு­படி செய்து தகுதி வாய்ந்த அதி­கா­ரி­களை நிய­மிப்­பதன் மூலம் நுண்­நி­திக்­கடன் பெற்ற ஏனை­ய­வர்­களை சுய­ம­திப்­பீடு செய்து அவர்­க­ளுக்­கான வட்­டி­களை முற்­றாக நீக்கி அதை மீள­ச் செ­லுத்­து­வ­தற்கு குறைந்­த­பட்சம் 5 வரு­டங்­க­ளா­வது கால எல்லை வழங்­கப்­பட வேண்டும். 

எனவே இந்த விடயம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வருவேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49