(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சீரான ஒழுங்கு முறைமையின் பிரகாரம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கான புதிய காணி உறுதிபத்திரம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

 

இந்த உறுதிப்பத்திரத்தை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க யைளித்தார்.

இந் நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, சப‍ை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சருமான கயந்த கருணாதிலக்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.