தலவாக்கலை புதிய பஸ் தரிப்பு நிலையத்தின் அருகில் காணப்படும் முச்சக்கரவண்டி நிறுத்தும் இடத்தினூடாக ஓடும் கழிவு நீர் கலந்த வடிகானை உடனடியாக சுத்தம் செய்து தரும்படி தலவாக்கலை நகர சபையின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த நகர சபையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பண்டாரநாயக்க புற நகர சபை லயன் குடியிருப்பு பகுதியிலிருந்து இந்த அசுத்த நீர் குழாய் ஒன்றின் ஊடாக வந்து சேர்வதாகவும், இதன் மூலம் இப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் நுளம்புகள் அதிகமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆறு கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டியமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையத்தின் அருகில் காணப்படும் கழிவு நீர் வடிகாணின் அவல நிலையினால் பயணிகள் நுளம்பு தொல்லைக்கு ஆளாகுகின்றனர்.

எனவே உடனடியாக இவ்வடிகாண்களை சீர்த்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இன்று காலை தலவாக்கலை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் டி.எம். எஸ்.பீ தல்பிட்டியவின் கவனத்திற்கு நாம் கொண்டுவரப்பட்டபோது பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைவாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அத்தோடு நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களை அமர்த்தி வடிகாண் சீர்த்திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)