(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

அர்ஜூன அலோசியஸிடம் பணம் பெற்றதாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சபையில் எழுப்பி நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கின்றோம் என  சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி இந்த விவகாரத்தை சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தமைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

118 பேர் பணம் பெற்றதாக கூறப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானவையாகும். அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய கூட உறுதிப்படுத்தினார். அதனை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. 

இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சபையில் எழுப்பி நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கின்றோம். இதனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அவபெயர் ஏற்படும் என்றார்.