நோர்வேயின் இராஜாங்க அமைச்சர் ஜுன்ஸ் புரோலிட்ச் ஹொல்டே நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இவர் இலங்கை, நோர்வே தொடர்பான இருதரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் சவால்கள், சமுத்திரம்சார் ஊக்குவிப்பு அம்சங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் இலங்கை மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு, நோர்வே வர்த்தக கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "எஸ்.டி.ஜி - 14 நீருக்கு அடியிலான வாழ்க்கை" எனும் கருத்தரங்கிலும் கலந்து கொண்டும் உரையாற்றவுள்ளார். 

மேலும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள நோர்வே இராஜாங்க அமைச்சர், மீள் குடியமர்ந்த மக்களிடையே நோர்வே திட்டங்களின் முன்னெடுப்பு குறித்து தனது பார்வையை செலுத்தவுள்ளதுடன் பலாலி கிழக்கில் காய்கறி பொதியிடும் மையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.