அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஊடகங்களும் தொழிற்சங்கங்களும் குரல் கொடுக்கும் போது அவற்றை பயமுறுத்தி அடிபணிய வைக்கும் வகையில் பிரதமர் செயற்படுவதாக மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிஷ மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய  செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.