(இரோஷா வேலு) 

கந்தானை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் முகாமையாளர் உட்பட 9 பேர் குற்றத்தப்டுப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வத்தளை நீதிவான் நீதிமன்றினால் வலான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட உத்தரவுக்கமையவே சுற்றிவளைப்பை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் குறித்த ஒன்பது பேரையும் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். 

ஜா-எல எலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஆண்னொருவரையும் கொடுகொட, சீதுவ, நுவரெலியா, கொம்பஹோர மற்றம் கிம்புலபிட்டியவைச் சேர்ந்த 32 - 36 வயதுக்கிடைப்பட்ட பெண்களையுமே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அத்துடன் இவர்களை இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.