(இராஜதுரை ஹஷான்)

தனிப்பட்ட குற்றங்களை புரியும் மத குருமார்களை விசாரிக்க விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா தெரவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரின் கைது விவகாரத்திற்கு பின்னர் பௌத்த மத குருமார்களுக்கு பிரத்தியேக நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு வருகின்றனர்.  தனிப்பட்ட குற்றங்களை புரியும் மத குருமார்களை விசாரிக்க விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது. ஏனெனில் சட்டம் அனைவருக்கும் எவ்வித தனிப்பட்ட  அந்தஸ்த்தும் வழங்காது.

எனவே பாரிய பரப்பினை கொண்டதாக காணப்படும் பெளத்த மதத்தை பாதுகாக்க வேறுபல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.