இலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சந்திரகுமாருக்குமிடையே சந்திப்பொன்று நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து இருவரும்  கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். 

குறிப்பாக வேலைவாய்ப்பின்மை, வறுமை, அபிவிருத்தி அவசியம், மக்களின் நாளாந்த வாழ்க்கை நெருக்கடிகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு பிரித்தானிய அரசு வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் சந்திரகுமார் நன்றி தெரிவித்தார்.