ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக  ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கிஹெலி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை இன்று சந்தித்து கருத்து வெளியிடுகையிலேயே நிக்கிஹெலி மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பானது "அரசியல் சார்புள்ள சாக்கடை" மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாகவே ஐ.நா. மனித உரிமை பேரவை செயற்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளோம்.

ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் ஐ.நா. சபை மனித உரிமை பேரவைலிருந்து வெளியேறி விடுவோம் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து விலகுவது என்ற முடிவ‍ை எடுத்துள்ளது என்றார்.