ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல அரசு தடை விதித்துள்ளமையால் 10ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மணிக்கு 45 முதல் 55கி.மி வேகத்தில் பலத்த காற்று வீசிவருவதால் ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் கீழக்கரை தொண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதுமுள்ள துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல மீன் துறை தடைவிதித்துள்ளது; 

இதனால் சுமார் ஆயிரத்து 750 விசைப்படகுகளும் சுமார் மூன்று ஆயிரம் நாட்டுப்படகுகளும் நங்கூரமிடப்பட்டுள்ளது; சுமார் 10ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதுடன் நாள் ஒன்றுக்கு ரூ ஐந்துகோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.