10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்

Published By: Digital Desk 4

20 Jun, 2018 | 08:37 AM
image

ரஷ்யாவின் சரன்ஸ்க் விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் எச் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் 10 வீரர்களாக மட்டுப்படு்த்தப்பட்ட கொலம்பியாவை 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜப்பான் வெற்றிகொண்டது.

ஐரோப்பிய மண்ணில் உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் ஜப்பான் வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும். அது மட்டுமல்லாமல் தென் அமெரிக்க அணி ஒன்றை வெற்றிகொண்ட முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையையும் ஜப்பான் பெற்றுக்கொண்டது.

போட்டி ஆரம்பித்து 3 நிமிடங்கள் ஆன நிலைவில் ஜப்பானுக்கு பெனல்டி ஒன்றை தாரைவார்த்த கொலம்பியா அதன் வீரர் ஒருவரையும் மத்தியஸ்தர் காட்டிய சிவப்பு அட்டையினால் இழந்தது.

ஜப்பான் வீரர் ஷிஞ்சி ககாவா உதைத்த பந்தை கோலுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக கொலம்பிய வீரர் கார்லோஸ் சன்ச்செஸ் தனது கையால் தட்டியதால் பெனல்டி வழங்கப்பட்டது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் வீரர் ஒருவருக்கு  போட்டி ஆரம்பித்து இரண்டாவது மிகக் குறைந்த நேரத்தில் (2 நி. 56 செக்.) சிவப்பு அட்டை காட்டப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். 

கொலம்பிய வீரருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டதை அடுத்து சில நிமிடங்கள் வாக்குவாதம் காரணமாக தடைப்பட்ட ஆட்டம் 6ஆவது நிமிடத்தில் தொடர்ந்தபோது பெனல்டி உதையை ககாவா கோலாக்கினார்.

சொற்ப நேரத்தில் ஜப்பானுக்கு மற்றொரு கோல்போடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், டக்காஷி இனுய், யுயா ஒசாக்கா ஆகிய இருவரும் அதனைக் கோட்டை விட்டனர்.

இடைவேளைக்கு 6 நிமிடங்கள் இருந்தபோது கொலம்பிய வீரர் யுவான் குவின்டீரோ மிக சாதுரியத்துடனும் விவேகத்துடனும் எடுத்த ப்றீ கிக் கோலானது. 

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன.

போதிய உடற்தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்ற காரணத்துக்காக முதல் பதினொருவர்களில் இடம்பெறாத கொலம்பியாவின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரொட்றிகூஸ் இடைவேளையின் பின்னர் மாற்று விரராக களம் புகுந்தார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் சமமாக மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. எனினும் போட்டியின் 73ஆவது நிமிடத்தில் ஜப்பான் இரண்டாவது கோலை போட்டு மீண்டும் முன்னிலை அடைந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் கெய்சுக் ஹொண்டாவின் கோர்ணர் கிக் பந்தை நோக்கித் தாவிய யுயா ஒசாக்கா தலையால் முட்டி கோல்பொட்டார்.

தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்த ஜேவியர் ரொட்றிகூஸ் எடுத்த முயற்சியை ஒசாகா அலாதியாக தடுத்தார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் உலகக் கிண்ண கால் இறுதிவரை முன்னேறிய கொலம்பியாவுக்கு, போலந்து, செனகல் ஆகிய அணிகளுக்கு எதிராக இரண்டு முக்கிய போட்டிகள் மீதமிருக்க இந்தத் தோல்வி பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இப் போட்டியில் விளையாடிய கோல் காப்பாளர் எய்ஜி கவாஷிமா (வயது 35 வருடங்கள், 91 நாட்கள்) ஜப்பான் சார்பாக அதி கூடிய வயதில் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனைக்குரித்தானார். 

(என்.வீ.ஏ.).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21