மறைந்த குணசித்திர நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் ஸ்கூல் கேம்பஸ் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ், ‘கல்கண்டு ’ என்ற படத்தின் மூலம் நான்காண்டுகளுக்கு முன் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இவர் தற்போது அறிமுக இயக்குநர் டொக்டர் ஆர் ஜே ராமநாராயணா என்பவர் இயக்கத்தில் உருவாகும் ஸ்கூல் கேம்பஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது,‘இந்திய கல்வி முறையில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் மிகப்பெரிய மாற்றத்தை விவரிக்கும் படமாக ஸ்கூல் கேம்பஸ் உருவாகவிருக்கிறது. இவருக்கு ஜோடியாக  நடிகை காயத்ரி நடிக்கிறார். இந்த படத்தில் ராஜ்கமல். கீர்த்தி என்ற மற்றொரு ஜோடியும் நடிக்கிறார்கள். இவர்களுடன் டெல்லி கணேஷ், மதன் பாபு, ரிந்து ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படபிடிப்பு டெல்லியில் தொடங்கியிருக்கிறது. ஒகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.’ என்றார்.

ஸ்கூல் கேம்பஸ் என்ற படத்தை இயக்குவதுடன் ஏ எம் என் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார் டொக்டர் ராமநாராயணா.