பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று காலை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாக குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.