சுவீடனின் மல்மோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 18 மற்றும் 29 வயதுடைய இருவர் மரணமானார்கள் என சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மல்மோநகரில் உள்ள  இன்டநெட்கபேயிற்கு வெளியே நின்றிருந்தவர்கள் மீது காரிலிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 முதல் 20 வரையிலான துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றதை தன்னால்  கேட்க முடிந்ததாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பதட்டமடைவேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் இதுவரையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை பயங்கரவாத தாக்குதல் என கருதவேண்டிய  தேவையில்லை இரு குழுக்கள் இடையிலான மோதல் காரணமாகவே இந்த வன்முறை இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.