பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் நாளை செவ்வாய்க்கிழமை சேவைக்கு திரும்புமாறு தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.

மேலும் நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ள தபால் ஊழியர்கள் நாளை பணிக்கு திரும்பாது எவ்வித முன் அறிவித்தலுமின்றி பணிக்கு சமூகமளிக்காமல் இருந்தால் அவர்கள் தானாகவே சேவையிலிருந்து இராஜினாமா செய்து கொண்டதாக கருதப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.