நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத் தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்பாட்டமொன்று ஆரம்பிக்கவுள்ளது.

 இதனால், கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.