மலையக சிறுமி கடத்தல் விவகாரம் ; 8 பேருக்கும் பிணை

Published By: Priyatharshan

18 Jun, 2018 | 03:12 PM
image

தலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உட்பட 8 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஒவ்வொருத்தருக்கும் தலா 10 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தலவாக்கலையில் 5 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று ( 18.06.2018 ) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவர்களுக்கு பிணை வழங்கிய நீதிவான், வெளிநாடு செல்லவும் தடை விதித்தார்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரையில் ஒத்தி வைத்தார். 

கடந்த 4 ஆம் திகதி சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மறுநாள் சிறுமியின் தாய் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13