யாழ்ப்பாணம், மயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீடீரென தீ பரவியுள்ளது.

மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலொன்றிலேயே குறித்த தீ பரவியுள்ளது.

நேற்றிரவு பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையிலும் குறித்த தீ இன்று முற்பகல் மீண்டும் தீ பரவியதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அங்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிங்டம் என்றழைக்கபடும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சரக்குக் கப்பலின் எஞ்சின் அறையில், தீ பரவியிருக்கலாம் என சந்தேகிப்படுகின்றது.

குறித்த கப்பல் கடந்த ஜனவரி மாதம் மயிலிட்டி துறைமுக கடற்பரப்பிலுள்ள மணல் திட்டொன்றில் மோதிய நிலையில் கைவிடப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.