தோல்வியின் பயமே தேர்தல் ஒத்திவைப்புக்குக் காரணம் - குமாரவெல்கம

Published By: Vishnu

18 Jun, 2018 | 01:42 PM
image

(நா.தினுஷா) 

மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ் வருடம் நடத்தினால் தோல்வியடைவோம் என்பதை அறிந்து மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்து, நேரடியாக 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான நகர்வுகளை அரசாங்கம் ஆரம்பித்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

மாகாணசபை தேர்தலை 50 க்கு 50 என்ற முறையில் அதாவது விகிதாசார  தேர்தல் முறையில் நடத்த வேண்டும் என ஒருசில  பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கிணங்க விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறையிலாக 50 க்கு 50 முறை பாராளுமன்ற அனுமதி கோரப்பட்டதுடன் அதற்கான பாராளுமன்ற அனுமதியும் கிடைத்துள்ளது.

அதேபோன்று மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை பற்றி சுட்டிகாட்ட வேண்டியதும் அவசியமாகும். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லை நிர்ணய அறிக்கைக்கான அனுமதி இது வரையில் கிடைக்கபெறவில்லை. எல்லை நிர்ணய அறிக்கைக்கான அனுமதி கிடைக்காத வரை தேர்தலை நடத்த முடியாது. 

தேர்தலை நடத்தும் முறைதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருவேறான கருத்துக்களே நிலவி வருகின்றது. ஒருசிலர் புதிய தேர்தலை வலியுருத்துகின்றனர். மற்றுமொரு சிலர் பழைய முறையினை வலியுறுத்துகின்றனர். இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தலை டிசம்பரில் நடத்துவதென்பது கடினமாகும். 

மேலும் மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தின் இறுதியில் இடம்பெறுமானால் கட்டாயமாக அரசாங்கம் தோல்வியே அடையும். தேல்வியினை ஏற்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலேயே அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்தி, மாகாண சபை தேர்தலை நடத்தாமல் நேரடியாக 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை குறிவைத்தே தனது நகர்வுகளை நகர்த்தி வருகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:18:47
news-image

அநுராதபுரம் கவரக்குளத்தில் பொல்லால் தாக்கி ஒருவர்...

2026-04-20 09:17:31
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14
news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18