திருவாரூர் மாவட்டத்தில் தலைக்காடு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ராஜேந்திரன் என்பவருக்கு பெற்றோர் விருப்பத்தின்பேரில் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால், தினமும் இரவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் ராஜேந்திரன், தனது மனைவியை ‘நீ அழகாக இல்லை.. கறுப்பாக இருக்கிறாய்’ எனக்கூறி அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளதுடன், கறுப்பாக இருக்கும் காரணத்தால் உல்லாசத்துக்கும் மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் நடந்து முடிந்ததை முன்னட்டு அண்மையில் மாமனார் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட ராஜேந்திரன், மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
விருந்துண்ட பிறகு இருவரும் உறங்கச் சென்றுள்ளனர். இதன்போது குடிபோதையில் மனைவியின் இடுப்பு, வயிறு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடித்து காயப்படுத்தியுள்ளார். அதன் பின்பும் ஆத்திரம் தீராத அவர் அந்த இரவு நேரத்தில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் தொலைபேசி மூலம் தனது நண்பர்கள் ஐவரை வரவழைத்து, தனது மனைவியுடன் உறவு கொள்ளுமாறு கூறி அவர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இதற்கு ராஜேந்திரனின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவரை கம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ராஜேந்திரனின் நண்பர்கள் ராஜேந்திரனின் மனைவியை மாறி மாறி பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மனையியை அழைத்துக்கொண்டு ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தொலைபேசி மூலம் தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக வந்து அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, திருவாரூர் மாவட்ட பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM