இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வர்த்தக ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் இரு நாட்டு பிரதிநிதிகளுக்குமிடையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல்களின் போதே மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் அதனடிப்படையில் இலங்கையின் கடற்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு தென் கொரியா உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.