நைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும் நைஜீரிய இராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த பிரச்சினையை அடுத்து, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள டம்போவா நகரத்தில் நேற்று இரவு போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் வெவ்வேறு தற்கொலைப்படை தாக்குதலை மேற்கொண்டனர்.

குறித்த தாக்குதலில் 31 பேர்  பலியானதோடு, மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.