கூட்டுசம்மேளன கிண்ண அரை இறுதியில் வெற்றிகொண்ட மெக்சிகோவை நடப்பு உலக சம்பியன் ஜேர்மனி, லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ண குழு எவ் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது. இப் போட்டி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் உலக சம்பியனான ஜேர்மனி அணியில் இடம்பெற்ற அனுபவம்வாய்ந்த மூத்த வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுள்ளதுடன் மரக்கானா விளையாட்டரங்கில் ஆர்ஜெண்டீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கோல்போட்ட இளம் வீரர் மரியோ கொட்ஸே, உலகக் கிண்ண ஜேர்மனி அணியில் இடம்பெறவில்லை. 

எனினும் அண்மைக்காலமாக ஜேர்மனி வெற்றிகளை சுவைத்து வந்துகள்ளதால் எவ்வித தாக்கத்தையும் அவ்வணி எதிர்கொள்ள வாய்ப்பில்லை.

மறுபுறத்தில் வெகுவாக முன்னெறியுள்ள மெக்சிகோ, கடந்த வருட கூட்டுசம்மேளன கிண்ண அரை இறுதியில் சொச்சி மைதானத்தில் ஜேர்மனியிடம் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்ய முயற்சிக்கும்.

தரப்படுத்தலில் ஜேர்மனி முதலாம் இடத்திலும் மெக்சிகோ 15 ஆவது இடத்திலும் இருக்கின்றன.

இதற்கு முன்னர் மூன்று தடவைகள் உலகக் கிண்ணப் போட்டிகளில் மூன்று தடவைகள் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துகொண்டபோது 2 போட்டிகளில் ஜேர்மனி வெற்றிபெற்றதுடன் ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.