(இராஜதுரை ஹஷான்)

மருதானை நகர பகுதியில் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத் தொகுதி ஒன்றினை மருதானை பொலிஸார்  அப்புறப்படுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி குறிப்பிடுகையில்,

இடிந்து விழும் நிலையில் இப் பழமைவாய்ந்த கட்டடம் காணப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக மருதானை ‍பொலிஸார் குறித்த கட்டட தொகுதியினை  அப்புறப்படுத்தியுள்ளனர்.

இக் கட்டடத் தொகுதியின் வணிக கடைத் தொகுதிகள் மற்றும் விற்பனையாளர்கள் தற்காலிகமாக பிறிதொரு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.