பப்­புவா நியூ கினி­யாவின் சதர்ன் ஹைலேண்ட் மாகா­ணத்தில் ஏற்­பட்ட கல­வரம் கார­ண­மாக  9 மாதங்­க­ளுக்கு நெருக்­கடி நிலை பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளது. 

பப்­புவா நியூ கினியின் சதர்ன் ஹைலேண்ட மாகாண ஆளுநர்  தேர்தல் முடி­வுகள் சமீ­பத்தில் வெளி­யா­கின. இந்த தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த வேட்­பா­ளரின் ஆத­ர­வா­ளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்­தனர். 

நீதி­மன்ற  தீர்ப்பும் அவ­ருக்கு எதி­ராக அமைந்­தது. இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் வெள்ளிக்­கி­ழமை கடும் வன்­மு­றையில் ஈடு­பட்­டனர். 

மாகாண தலை­ந­க­ரான மென்­டியில் ஒரு விமா­னத்­திற்கு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள்  தீ வைத்­தனர். மேலும் சில கட்­ட­டங்­க­ளையும் சேத­மாக்கி தீ வைத்­ததால் பதற்றம் அதி­க­மா­கி­யது. நில­ந­டுக்க பாதிப்­புக்­கான நிவா­ரணப் பொருட்கள் வைத்­தி­ருந்த கட்­டடம்  கும்­பல்­களால் சூறை­யா­டப்­பட்­டது. கல­வரம் மேலும் பரவி, நிலைமை கட்­டுக்­க­டங்­காமல் போன­தை­ய­டுத்து, மாகா­ணத்தில் நெருக்­கடி நிலை பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளது. 

9 மாதங்­க­ளுக்கு இந்த நெருக்­கடி நிலை அமுலில் இருப்­ப­தா­கவும், அது­வரை மாகாண அரசின் ஆட்சி இரத்துச் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பிர­தமர் பீட்டர் ஓ-நீல் அறி­வித்­துள்ளார். வன்­மு­றையில் ஈடு­ப­டுவோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அவர் எச்­ச­ரித்­துள்ளார்.மாகா­ணத்தில் வன்முறையை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்காக ஏராளமான படைகள் அங்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.