ஜக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நேற்றைய தினம் ஓமான் அணியுடன் தகுதிகான் போட்டியில் வெற்றியீட்டி இம்முறை ஆசிய கிண்ணப் போட்டியில் பங்கு பற்றுவதற்கு தகுதி பெற்றது.

நேற்றைய தகுதிகான் தேர்வுக்கான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.

172 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.71 ஓட்டங்களினால் வெற்றியடைந்த ஜக்கிய அராப் எமிரேட்ஸ் அணி, ஆசிய கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று இலங்கை அணியுடன் முதலாவது போட்டியில் மோதவுள்ளது.