(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மீனவ படகுகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி 2017 ஆம் ஆண்டில் கைபற்றப்பட்டுள்ள 216 படகுகளில் 42 படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவற்றில் 32 படகுகள் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலும் இந்திய மீனவ படகுகளை விடுவிக்க இலங்கை  தயாராகவுள்ளதாகவும் அவ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளின் பெருமதி இந்திய ரூபாய் படி 8 தொடக்கம் 10 இலட்சம் ஆகும். அடுத்த மாதம் 4 ஆம் திகதி டெல்லியில் இடம்பெறவுள்ள இந்திய - இலங்கை உத்தியோகபூர்வ சந்திப்பிலும் இது பற்றி கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இலங்கை கடற்படை அதனை மறுத்துள்ளது.