திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி பிக்சர்ஸ் மற்றும் ட்ரான்ஸ் லிங்க் மீடியா T.K.ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் கபாலி தோட்டம்.


இந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக புதுமுகம் விக்கி மற்றும் எம் .ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் இருவரும் நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அனிஷா நடிக்கும் இந்தப் படத்தில் கோலிசோடா வில்லன் மது முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

மேலும், கே,ராஜன், ரோபோ சங்கர், தில்லி ஆர்.முகுந்தன்,தாஸ் பாண்டியன், சுமலதா, ராதா, அருண்பாண்டியன், தஞ்சை தமிழ் பித்தன், பா.கி, P.K.இளமாறன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை நடிக்கிறார்கள்.

இந்தப்படத்திற்கான தொடக்கவிழா ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குனர் பேரரசு, இயக்குனர், சமுத்திரக்கனி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சவுந்தர்ராஜா, சித்ரா லட்சுமணன் தொடங்கி திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

T.R.பாஸ்கர் எழுதி இயக்கம் இந்தப்படத்திற்கு யு.கே.முரளி இசையமைக்க பிரியன் பாடல்களை எழுதுகிறார்.

படத்தைப்பற்றி இயக்குனரிடம் கேட்டதற்கு- “தீயதைத் தீயிட வருவான் என்பதுதான் படத்தின் ஒன்லைன். சென்னையில் நடந்த உண்மைக் கதையை வைத்து எடுக்கவிருக்கிற கமர்ஷியல் படம்தான் இது.” என்கிறார்.

மொத்தப் படமும் சென்னையில் படமாக்கவிருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்