பொலிவியாவில் பயணிகள் பஸ் ஒன்று  பாறை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்த போது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து  பெரிய பாறையில் மோதி வியத்துக்குள்ளாகியுள்ளது.

பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 17 பேர் உயிரிழந்ததோடு. 30 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.