தெஹியோவிட்ட, அடுலுகம சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று மாலை 4.00 மணியளவில் தெஹியோவிட்ட அடுலுகம சந்தியில், கரவனல்லையிலிருந்து அவிசாவளை நோக்கி புறப்பட்ட வேன் ஒன்று எதிரே வந்த காரொன்றுடன் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அத்துடன் இவ்வாறு விபத்துக்குள்ளான காரின் பின்னல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியுள்ளது. 

இந்த விபத்தின் காரணமாக படுகாயமடைந்த வேனின் சாரதி  கரவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.