அவுஸ்திரேலியாவின்  இளம் நகைச்சுவை நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுரோடைஸ் டிக்சன் என்ற 22 வயது நகைச்சுவை நடிகையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நிகழ்வொன்றின் பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இவர் காணாமல் போய் சில மணிநேரத்தின் பின்னர் மெல்பேர்னின் கால்பந்தாட்ட மைதானமொன்றில் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தனக்கு தொடர்புள்ளதாக தெரிவித்து 19 வயது இளைஞன் ஒருவன் சரணடைந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் அவன்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

எனினும் குறிப்பிட்ட நபரும் நகைச்சுவைந டிகைக்கும் இடையில் தொடர்பில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நடிகையின் வீட்டிற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நான் வீட்டிற்கு பாதுகாப்பாக வந்துவிட்டேன் என நடிகை தனது நண்பிக்கு குறுஞ்செய்தி அனுப்பினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அவுஸ்திரேலியா பெண்களிற்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

பெண்களிற்கு எதிரான வன்முறைகள் அவுஸ்திரேலியாவில் கவலை தரும் விதத்தில் அதிகரித்து வருகின்றது என நாட்டின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.