(எம்.மனோசித்ரா)

கதிர்காமம் கிரிவெஹர விகாரையின் விகாராதிபதி கொபவக தம்மானந்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொபவக தேரர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கிரிவெஹர விகாரையின் முன்னாள் பூசகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்காக 8 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.