நீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் காணமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, எத்துகல, பொறத்தோட்ட கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்களில் இரு மாணவர்களே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு மாணவர்களையும் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.