அர்ஜெண்டினாவில் பொலிஸாரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தங்கள் வீட்டிற்கு அருகில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டு இருப்பதாக கூறி தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனெனில் வீட்டினுள் Marisa Almiron(42) என்ற பெண் ஒருவர் நிர்வாணமாக கட்டினுள் கட்டப்பட்டு கிடந்துள்ளார். இதனால் பொலிஸார் அவரை மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அந்த பெண் இளமையாக இருந்த போது ஒருவரை காதலித்துள்ளார். இதற்காகவே அப்பெண்ணின் தந்தை இந்த கொடூர தண்டனை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், தந்தை 8 வருடங்களில் இறந்த பின்பும் இந்த பெண்ணின் சகோதரர் 12 வருடங்களாக இந்த கொடூர தண்டனையை பின்பற்றி வந்துள்ளார்.

இதனால் அந்த பெண் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உரிய சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்த நபர் கூறுகையில், அந்த பெண் மிகப் பெரும் துயரங்களை சந்தித்துள்ளார், அவ்வப்போது அலறல் சத்தம் கேட்கும் இதன் காரணமாகவே பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாக கூறியுள்ளார்.